Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிற்கு… தாறு மாறாக ஓடிய லாரியால் நேர்ந்த கொடூரம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவினாசி சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அந்த லாரி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுவது போன்று  வந்ததால் எதிரே வாகனத்தில் வந்தவர்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த லாரியை கடந்து சென்றனர். அப்போது அனுப்பர்பாளையம் அருகே வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள் மீது மோதி அங்கு உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் உள்ளே புகுந்தது.

இதையடுத்து லாரி ஓட்டுநர்  லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்களும் கடையும் சேதமடைந்தது. அதிகாலை நேரத்தில்  கடையில் ஆட்கள் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்  உயிருக்கு  போராடியவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு  தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் உயிரிழந்த பெண் திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த தெய்வானை(75) என்று தெரிந்தது.  இவர் அவிநாசியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மகன்  பழனிசாமியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் யார்  மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரை  வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |