Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய டிப்பர் லாரி…. கோர விபத்தில் பறிபோன வாலிபர் உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை டிப்ளமோ முடித்து ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி சார்நாயகம்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈராட்சி கசவன்குன்று பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி பாலாஜி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொப்பம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான மீனாட்சிபுரம் பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |