Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-ஆட்டோ மோதல்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் கோர விபத்து….!!

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு வலதி மாயாண்டி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வலதி மாயாண்டி மோட்டார் சைக்கிளில் தனது அம்மாவையும், தனது அக்காளின் ஒரு வயது குழந்தை பேச்சிதன்சிகாவையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபுரம் அருகில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த குறிஞ்சிநகர் பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குழந்தைக்கு கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் சுப்புலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சுப்புலட்சுமியை உடனடியாக மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சுப்புலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாயாண்டி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |