Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்செவலாம்பாடி கிராமத்தில் அருண்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் சேத்துப்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.

இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் 2 பேரையும் உடனடியாக மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக இமாகுலேட்டை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இமாகுலேட் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |