மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முடிவைத்தானேந்தல் பகுதியில் அரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அர்ஜூனனின் மனைவி தங்கம் என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.