Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நல்லமுத்து வேலைக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் பிரியும் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்ட நல்லமுத்து பலத்த காயமடைந்தார். இதனைப்பார்த்த அருகிலுள்ளவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நல்லமுத்துவை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நல்லமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |