Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர் என்ற பெயரில்…. வாலிபர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

விபச்சார வழக்கில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரட்டாங்காடு பகுதியில் தெற்கு காவல்துறையினருக்கு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மசாஜ் சென்டரில் திருநெல்வேலியில் வசிக்கும் 27 வயதுடைய பெண் இருந்தார். இவர் ஆண்களை வரவழைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதன்பின் காவல்துறையினர் மசாஜ் சென்டர் பொறுப்பாளரான கரட்டங்காடு பகுதியில் வசிக்கும் கிஷோர் மற்றும் வரவேற்பாளரான பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனுமதி இல்லாமல் மசாஜ் சென்டர் நடத்தியதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |