மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் பகுதியில் பெரிய குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அய்யம்மாளும் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் நடந்த கோவில் விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது குருவிகுளம் அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த கணேசமூர்த்தியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குருவிகுளம் காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான கே.புதூர் பகுதியில் வசிக்கும் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.