மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி சட்ட மசோதா விதியை மீறி நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயம் சார்ந்த மூன்று சட்ட மசோதாக்களும் மாநிலங்களவையில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.