உலகம் முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டது தான் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியா நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது.
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச பாதிப்பு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 13 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 47 லட்சமாக உயர்ந்துள்ளது.