Categories
மாநில செய்திகள்

பிரபல ரவுடி… மர்ம கும்பலால்… கொடூரமாக வெட்டி சாய்ப்பு…!!

மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஆனந்தன் என்பவர் மீது கொலை, அடிதடி போன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில், நேற்று  மாலை வண்டியூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கின் பின் பகுதியில் உள்ள முள்புதரில் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டுக் கிடப்பதாக அண்ணாநகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த ரவுடி ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மோப்பநாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. முதல் கட்ட விசாரணையில் அந்த முள்புதரில் மாலை நேரம் 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தியதாகத் தெரியவந்துள்ளது. 2012ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் 50 ரூபாய்க்காக இரவுப் பணியில் இருந்த பாதுகாவலரை ஆனந்தன் கொடூரமாக அடித்துக் கொலைசெய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |