Categories
மாநில செய்திகள்

வெற்றி பெற்றால்….. “இலவச E-ஸ்கூட்டர்” பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பவர் தலைமையில் பாஜக கட்சி நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதன்படி உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 40% இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சிக்கு வந்தால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச பொருட்கள் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பட்டதாரி பயின்ற மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,” நேற்று சில மாணவிகளை சந்தித்து பேசியபோது அவர்கள் படிப்பதற்கு மற்றும் பாதுகாப்பிற்கும் ஸ்மார்ட்போன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.” இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடனே 12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பட்டதாரி முடித்த மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.அதுமட்டுமில்லாமல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பெண்களின் நிலையை உயர்த்தி ஒன்றுபட்டு வாழ்வதற்காக சாதி மற்றும் மதம் போன்ற பிரிவுகளை தவிர்த்து நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அந்த மாநில பாஜக துணைத் தலைவர் மற்றும் மேலவை உறுப்பினர் கூறிய போது, 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்து வருகிறது என்றும் இதனை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறிய வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.

Categories

Tech |