ஒன்வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பூ, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது அவரிடம், வெற்றிமாறன் ராஜராஜசோழன் பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என அவர் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என கூறியுள்ளார். மேலும், ‘வரலாறு தெரியாமல் மணிரத்தினம் படம் எடுத்திருக்க மாட்டார். இது ஒரு பான் இந்தியா படம். முகம் காட்டாமல் விமர்சனம் சொல்பவர்கள் பற்றி கவலை இல்லை’ என கூறினார்.