Categories
மாநில செய்திகள்

வேதனையை சொல்லி மேடையில் குமுறிய முதல்வர் ஸ்டாலின்…. திடீரென சிரித்த அமைச்சர் பொன்முடி நடந்தது என்ன….?

சென்னையில் நேற்று கூட்டப்பட்ட திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் போட்யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி பொதுச் செயலாளர், துணை பொது செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டது. ஆரவாரத்துடன் தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சால் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையுடன் முடிந்தது. பெண்கள் இலவச பேருந்து குறித்து அமைச்சர் பொன்முடியும், பெண்களுக்கான மாத தொகை குறித்து அமைச்சர் துரைமுருகனும் பேசியது சர்ச்சையானது. மேலும் பல இடங்களில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கமிஷன் கேட்கும் வீடியோக்கள் வெளியாகி அரசின் மீது தொடர்ச்சியான விமர்சனங்களையும் குற்றசாட்டுகளும் குவிந்து வருகிறது. இதனால் அப்செட் ஆகியுள்ள முதல்வர் ஸ்டாலின் மேடையில் தனது வேதனையை தெரிவித்ததோடு பகிரங்கமாக கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது பேசிய ஸ்டாலின், கட்சி தலைவர் பதவி ஒரு பக்கம், மாநில முதல்வர் என்று ஒரு பக்கம் என இரு பொறுப்புகளில் தான் இருக்கிறேன். மத்தளத்துக்கு இரண்டு பக்கங்களிலும் அடி விழும் என்பது போல என் நிலைமை உள்ளது. இந்நிலையில் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கட்சி நிர்வாகிகளும், மூத்தவர்களும் அமைச்சர்களும் நடந்து கொண்டால் நான் என்ன செய்வேன். நீங்கள் எந்த புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் தினமும் கண் விழிக்கிறேன். 3 வது கண் போல அனைவரிடமும் செல்போன் மாறிவிட்டது. வீட்டு படுக்கையறை, கழிவறை தவிர எல்லாமே பொதுமையாகிவிட்டது. பொது வெளியில் நீங்கள் பேசிய முறையால் கட்சியை ஏளனம் செய்கிறார்கள். உங்கள் செயல்பாடுகள் உங்களுக்கும் கழகத்துக்கும் பெருமை தேடி வர வேண்டுமே தவிர இழிவை அல்ல. பொது நன்மைக்காகவும் மட்டுமே இல்லை உங்களது நன்மைக்காகவும் நான் இதை சொல்கிறேன் என்று கூறினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடி கலகலவென சிரித்தார்.

Categories

Tech |