நாடு முழுவதும் மாநில அரசுக்களின் சுழலுக்கு ஏற்ப பேருந்துக்குள் இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசு நேற்று நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதில் மெட்ரோ சேவைக்கு அனுமதி, திறந்தவெளி திரையரங்கிற்கு அனுமதி, மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் அனுமதி, இ- பெர்மிட் ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேபோல் பேருந்து போக்குவரத்து , ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளின் இயக்கத்தை சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகளை முடிவு செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆராய்ச்சி, முதுநிலை கல்வி பயில்பவர்கள் ஆய்வுப்பணிகள், செய்முறை பயிற்சிக்கு கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்லலாம் எனவும், நீச்சல்குளம் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளது.