ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதேபோல குமரி, நெல்லை, மதுரை, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறி இருக்கிறது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.