தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் அரசு தேவையான அனைத்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழகத்தின் கொரோனாவை கையாண்ட விதமே பார்த்தோமென்றால், அதிகமான பரிசோதனை , சீக்கிரமாக பாசிட்டிவ் கண்டறிதல், நல்ல சிகிச்சை கொடுப்பது, குணப்படுத்துவது, அப்படி தான் தமிழகத்தின் கொரோனா கையாள்வது சென்று கொண்டு இருக்கின்றது.
நல்லா பண்ணி இருகாங்க:
பல மாவட்டங்களில் முழுமையாக தடுப்பு நடவடிக்கைகளை செய்து, தொடர்ந்து 22 நாள், 17 நாள், 15 நாள், 10நாள், 8நாள் என அந்த மாவட்டத்தில் எந்த விதமான நோய் தொற்றும் ஏற்படாமல், பாதிக்கப்பட்ட பகுதி இல்லாமல், புதிதாக தொற்று உருவாகாமல் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நிர்வாகம், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் முதலமைச்சர் வழிகாட்டல் படி நல்லா பண்ணி இருக்காங்க.
சவாலான பணி:
நமக்கு சவாலான பணி என்னவென்றால், இ-பாஸ் வாங்கிக்கொண்டு சாலை போக்குவரத்து மூலமாக, நம்முடைய சொந்தங்கள், உறவினர்கள் வெளி மாநிலங்களிலிருந்து நம்முடைய மாநிலத்துக்கு வராங்க.அவர்கள் மூலமா ஒரு நோய் தொற்று இந்த சமூகத்திற்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சோதனைச் சாவடியில் இப்ப வரைக்கும் முழுமையாக ஸ்கிரீனிங் செய்கின்றோம். இன்றைக்கு மட்டும் 93 பேர் வெளியிலிருந்து உள்ளே வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கு.
942 பேர் வந்துட்டாங்க:
இந்த ஒரு வார காலத்தில், இ-பாஸ் மூலமாக வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள், விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், டெல்லியில் இருந்து இரயில் மூலமாக வந்தவர்கள் என 942 பேருக்கு கொரோனா தொற்று இருக்கு. செக்போஸ்ட் செக் பண்ணி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழுமையான கண்காணிப்பில் வைத்துள்ளோம், அவர்கள் அனைவரையும் குணப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாராஷ்டிரா அதிகம்:
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து மட்டும் 726 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 21 பேருக்கும், டெல்லியில் இருந்து வந்த 15 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த 19 பேருக்கும், அதேபோல கேரளா, ஆந்திரா பிற மாநிலங்களிலிருந்து இருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
25 விமானம் அனுமதி:
இவர்கள் மூலமாக இவர்களின் ஊரைச் சார்ந்த மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என அரசு தெளிவாக இருக்கின்றது, இது அரசுக்கு இருக்கும் சவால்கள். இந்த சாலாவோடு சேர்த்து இப்போது, புதிய சவால்கள் வந்துள்ளது. இன்று முதல் உள்நாட்டு விமானம் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவிச்சிருக்கு. மாண்புமிகு முதலமைச்சர் மத்திய அரசிடம் வலியுறுத்தி, தமிழகத்தில் இருக்கக்கூடிய நிலைகளை எடுத்துச் சொல்லியாதல் ஒரு நாளைக்கு 25 உள்நாட்டு விமானங்கள் தரை இறங்கலாம் என்று சொல்லி 25 விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைகளில் மை வைப்போம்:
தமிழகத்தில் இருந்து விமானம் பிற மாநிலங்களுக்கு செல்ல எந்த கட்டுப்படும் இல்லை. 25 விமானங்களில் வருபவருக்கு சில வழிகாட்டல்களை அரசு வழங்கியுள்ளது. அதில், அனைத்து ஏர்போர்ட்டிலும் மருத்துவ குழு வருபவர்களை முழுமையாக தெர்மல் ஸ்கிரீன் பண்ணி, டெம்பரேச்சர் இருக்கானு செக் பண்ணி, நோய் அறிகுறி இருக்கானு பார்த்து, டெஸ்ட் பண்ணி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்கின்றோம். எந்த அறிகுறியும் இல்லை என்று மருத்துவக்குழு முடிவு செய்தால், முதல்வரின் அறிவுரைக்கிணங்க கைகளில் அழியாத மையை வைத்து நாளோடு ஸ்டாம்பிங் பண்ணிடுவோம்.
முழு கண்காணிப்பு:
ஸ்டாம்பிங் பண்ணியவர்கள் 14 நாள்களுக்கு தனிமையில் இருக்கணும். அதை கடைபிடிக்க வேண்டும் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு வந்துவிட கூடாது என்ற விதிமுறைகளை வகுத்து அதனை வெளியிட்டுள்ளோம் அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அதனை கண்காணிப்போம். இன்றைக்கு 11 உள்நாட்டு விமானங்கள் வந்துள்ளது, 456 பேர் தரையிறங்கியுள்ளார். மருத்துவகுழு முழுமையாக கண்காணித்து இருக்கிறார்கள்.
சவாலை சந்திக்கின்றோம்:
14 விமானம் தமிழகத்தில் இருந்து சென்றுள்ளது 1,211 பேர் தமிழகத்தில் இருந்து பிறபகுதிகளுக்கு சென்றுள்ளனர். இங்கு இருந்து போகின்றவர்களையும் நாம் ஸ்கேன் பண்ணி அனுப்புறோம். இந்த நடவடிக்கைகள் முழுமையாக தொடரும். இதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்த மாதிரியான புதிய சவால்கள் வருகின்ற போதுதான் அரசு பல்வேறு குழுக்களை, பல துறைகளோடு ஒருங்கிணைத்து அமைத்து இதை முழுமையாக செய்து வருகின்றோம்.