தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
அப்பதிவில் ”நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் குழந்தைகளும்) உங்களை எவ்வளவு அன்பு செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
https://www.instagram.com/p/B63oxgvBdJV/?utm_source=ig_web_button_share_sheet