சென்னையில் போக்குவரத்து எளிமையாக கூடிய வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீல வழித்தடம், பச்சை வலிகளை இரு வழித்தடங்களில் முதல் கட்டம் திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. அடுத்த கட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டு உள்ளனர். அதில் Corridor 3 எனப்படும் மூன்றாவது வழிதடத்தில் மாதாவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதில் மாதவரம் அருகில் சுரங்கப்பாதை பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் வேகம் எடுத்துள்ளது. மாதாவரம் பால்பண்ணை மெட்ரோ ரயில் நிலையமானது பூமிக்கு அடியில் சுரங்க ரயில் நிலையமாக அமைய உள்ளது. பூமியை துளையிடும் இயந்திரம் மூலம் 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு துளையிட உள்ளனர். நாள் ஒன்றுக்கு 10 மீட்டர் ஆழத்திற்கு துளையிட திட்டமிட்டுள்ளனர். இதன் முலம் 14 நாட்களில் 80 அடி ஆழத்திற்கு தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய CMRL மேலாண் இயக்குனர் எம்.ஏ.சித்திக், துளையிடும் இயந்திரத்தின் வால் பகுதி மட்டும் 100 மீட்டர் நீளம் கொண்டது. இதன் முழுவதுமாக பூமிக்குள் நுழைந்து துளையிட்டு செல்லும். எப்படியும் மாதகணக்கில் ஆகிவிடும். இதன் தொடர்ச்சியாக இரண்டாவது துளையிடும் இயந்திரம் பணிகளை தொடங்கும்.