இதுவரை நாம் அறிந்திராத வேப்பிலையின் மருத்துவ பலன்கள் :
வேப்பிலை இந்தியாவின் முதன்மையான மூலிகையாகும். அதன் மருத்துவ குணங்கள் பற்றி உலகம் முழுவதும் அறியப்படும். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பண்டைய நூல்களிலும் வேப்பிலையின் மருத்துவ நன்மையை பற்றி குறிப்பிட்டு உள்ளன.
வேப்பிலையின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நன்மைகள் :
1.அரிக்கும் தோல் அலர்ஜி, முகப்பரு, தோல் ஒவ்வாமை, தடிப்புகள், நமைச்சல், வளையப்புழுக்கள், போன்ற தோல் வியாதிகளிலிருந்து நம்மை விடுவிப்பதில் வேப்பம் தூள் அல்லது வேப்பம் எண்ணெய் பயன்படுகிறது.
2.வேப்பம் எண்ணெய் தசைவலி மற்றும் மூட்டுகளில் மசாஜ் செய்ய பயன்படுத்தலாம்.முடக்கு வாதம், கீல்வாதம், ஆகியவற்றின் வலியை போக்கவும் பயன் படுத்தலாம்.
3.வேப்பஎண்ணெய், முடி எண்ணெய்க்கு மாற்றாக பயன்படுத்தும் போது,பல முடி பிரச்சனைகளை தீர்த்து வைத்து அற்புதமான முடிவுகளை அளிக்கிறது. முடி நரைப்பதையும் தடுக்கிறது. பொடுகு, பேன், முடி உதிர்வு போன்ற பிரச்சனைக்கும் தீர்வளிக்கிறது.
4.தீக்காயங்களுக்கு வேப்பம் நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். சருமத்தை வேகமாக குணப்படுத்துகிறது. தொற்றுநோய் உண்டாகாமல் தடுக்கிறது.
5.வேம்பில் பாக்டிரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு பண்புகள், அதாவது கிட்டத்தட்ட நுண்ணுயிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
6.வேப்ப இலைகள் சேர்க்கப்பட்டுள்ள தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. நமது உடலில் உள்ள கிருமிகளை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.
7.வேப்பிலையை உட்டுக்கொண்டாள் பல வழிகளில் நன்மை .வாயின் சுவையை மீட்டெடுக்கும், மல சிக்கலை குணப்படுத்தும், அஜீரணத்திலிருந்து விடுபடவும் குடலில் உள்ள புழுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கும்.
8.வேப்பிலையை ரத்தத்தின் தரத்தை திறம்பட மேம்படுத்துவதாகவும், அதை சுத்திகரித்து செயல்படுத்தவும் பயன் அளிக்கிறது. இது ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை அகற்றி நோய்வராமல் தடுக்கிறது.
9.நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வேம்பு ஒரு சிறந்த மருந்தாக பயன் படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அதிக அளவில் உதவுகிறது.
10.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிக வலிமையாக்கவும், உடலை பலவீன படுத்தக்கூடிய எந்த ஒரு வெளிப்புற நோயிலிருந்தும் விடுபடவும் வேப்பிலைக்கு சிறப்பு உண்டு.