Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்தயத்தின் அறிய மருத்துவ குணங்கள்….!

வெந்தயம் உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு பல்வேறு அறிய மருத்துவ குணம் கொண்டதாகும்….!

  • வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் வெந்தயத்தை நீரோடு சேர்த்து குடித்து வர உடல் சூடு தணியும்.
  • முளைகட்டிய வெந்தயத்தை காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
  • வெந்தயத்தில் நார்ச்சத்து,பொட்டாசியம்,இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

  • உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கிறது.
  • பாலூட்டும் தாய்மார்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • 40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் அசௌகரியத்தை உணர்வதோடு மனநிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். உடலில் அதிக வெப்பமும் எரிச்சலும் உண்டாகும். அப்படிப்பட்ட பெண்கள் தினமும் உட்கொண்டால் உடல் சூடு தணிந்து எரிச்சல் நீங்கும்.
  • வயிற்றில் செரிமான பிரச்சணை, வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால் வெந்தயத்தை முளைக்கட்டவைத்து சாப்பிட்டால் உடனே சரியாகும்.

Categories

Tech |