Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா…..!!!!! முகம் பொலிவுடன் மாறுவதற்கு ……

வெந்தயம் நம்  உடல் ஆரோக்கியத்திற்கும்,  தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும்.

எளிமையான  முறையில் வீட்டிலே  நமது சருமத்தை பராமரிப்பதற்கு வெந்தயத்தை பயன்படுத்தலாம். நமது அழகு இன்னும் அதிகரிப்பதற்கு  நிறைய செலவு  இல்லாமல்  வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிஞ்சிக்கப்போறோம்…!!!!

சருமத்துளைகள்: வெந்தயம் கூட கொஞ்சம் பால் சேர்த்து நல்லா  பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி மெதுவாக  மசாஜ் செய்து,  15 நிமிடம் கழித்து நன்கு முகத்தை கழுவிடவேண்டும். இப்படி செய்வதால்   சருமத் துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி உங்கள்  முகம் நன்கு பொலிவுடன்  இருக்கும். இதை  நீங்கள்  தினமும் செய்து கொண்டால் முகப்பொலிவை பெறலாம்.

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து  நன்கு  பேஸ்ட் ஆக செய்து, அதை சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும். இதுனால்  என்ன நன்மை என்று பார்த்தால்  சூரிய கதிர்களால், முகத்தில் ஏற்படும் கருமை நிறம் மாறிவிடும்.

வெந்தயத்தை வறுத்து  பொடியாக்கி,  அதுகூட தயிர் சேர்த்து உங்க முகத்தில் பூசிக்கொள்ளலாம்.  நன்கு காய்ந்த  பிறகு குளிர்ந்த நீரினால் கழுவிடவேண்டும். அதன் பின் உங்கள் சருமம், எந்த அளவு பொலிவாக இருக்கும் என்று பாருங்கள்.

முகத்தில் பருக்கள் இருக்கிறதா?  வெந்தயத்தை பயன்படுத்தலாம்.  வெந்தயம், தேன் கலந்து  அதை உங்கள்  முகத்தில் பருக்கள் இருக்கிற இடத்தில்  தடவி கொள்ளலாம். இதை நீங்கள் தினமும் செய்து கொள்ளலாம்.ஆனால் முக்கியமான ஒரு விஷியம்  சருமத்தில் அலர்ஜி  போன்ற பிரச்னை கொண்டவர்கள்,  மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துகொண்ட பின் பயன்படுத்தி பாருங்கள்..

பல பேருக்கு  வரற்றியான சருமம் இருக்கும். அதற்கு   வெந்தயத்தை வெண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கை, கால், முகம் என கழுவவேண்டும். இதனால் சரும வரற்றியை தடுக்கலாம்.

குறிப்பாக சொல்லவேண்டும், என்றால் வெந்தயம் குளிர்ச்சியான பொருள் என்பதால், சுவாச பிரச்னை இருப்பவர்கள் இதை  பயன் படுத்துவதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள.

Categories

Tech |