Categories
சினிமா தமிழ் சினிமா

‘4 நாளில் லாபம்’….. ”மாநாடு” படம் குறித்து வெங்கட் பிரபு மகிழ்ச்சி…..!!!

‘4 நாளில் லாபம்’ என ‘மாநாடு’ படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? சிம்புவுக்கு அடித்த ஜாக்பாட்! | Maanaadu movie first day box office collection reports - Tamil Filmibeat

இதனையடுத்து, நவம்பர் 25 ம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், மாநாடு திரைப்படத்தால் ”நான்கு நாட்களில் அனைத்து தமிழக விநியோகஸ்தர்களும் லாபம் அடைந்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்”. மேலும், ” கேரளா மற்றும் கர்நாடகாவில் மூன்றே நாட்களில் லாபம் ஈட்டியுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |