ரோஜா சீரியலில் இருந்து விலகிய நடிகர் வெங்கட் இது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றனர். சீரியல் நடிகர்கள் பலர் ஒரு சீரியலில் மட்டும் நடிக்காமல் வாய்ப்பு கிடைத்தால் 2,3 சீரியல்களில் கூட நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வருபவர் வெங்கட். ஆனால் இவர் ரோஜா சீரியலை விட்டு சமீபத்தில் விலகிவிட்டார். இதுகுறித்து அவர் தற்போது முதல் முறையாக பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, “எனக்கு கொரோனா ஏற்பட்டதால் 20 நாட்கள் தனிமையில் இருந்தேன். இதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதன் பிறகு எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் இரண்டு சீரியல்களில் என்னால் நடிக்க முடியவில்லை. மேலும் ரோஜா சீரியலில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை என்பதாலும் அதிலிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.