‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.. மேலும் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரகாம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.. இந்தப் படம் சிம்புவும் கௌதம் வாசுதேவனும் இணையும் மூன்றாவது படமாகும்.. இதற்கு முன்னதாக ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது..
சமீபத்தில் தான் காலத்துக்கும் நீ வேணும் மற்றும் மறக்குமா நெஞ்சம் என 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.. இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில், இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இந்த நிலையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.. இந்த ட்ரெய்லர் 2.19 நிமிடங்கள் ஓடுகிறது.. ட்ரெய்லரில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் கௌதம் மேனன்.. இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் வர இருக்கிறது. இப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/nammavar11/status/1565728833415700481