Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காதுகுத்து நிகழ்ச்சி…. நிலைதடுமாறிய வேன்.‌… காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

காதுகுத்து நிகழ்ச்சிக்கு சென்ற வேன் நிலைதடுமாறி 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாம்பாக்கம் பகுதியில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் என 15-க்கும் அதிகமானோர் வேனில் படவேட்டம்மன் கோவிலில் நடைபெற இருக்கும் காதுகுத்து நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |