Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. முழு கொள்ளளவை எட்டிய அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

வரட்டுப்பள்ளம் அணையானது நிரைந்து வழிந்தால் விவசாயிகள் ஆனந்தத்தில் இருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் 2 மலைகளுக்கு இடையில் வரட்டுப்பள்ளம் அணையானது கட்டப்பட்டுள்ளது. இந்த அணையுடைய மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும். இதில் பர்கூர் பகுதிகளில் மழை பெய்யும்போது அந்த தண்ணீரானது காட்டாறு, ஓடைகள் வழியாக இந்த அணைக்கு வந்து சேர்ந்துவிடும். எனவே வரட்டுப்பள்ளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இந்த அணை தண்ணீரே ஆதாரமாக இருக்கிறது. மேலும் அங்குள்ள வனப்பகுதியில் இருந்து மான், யானை உள்ளிட்ட விலங்குகள் இங்கு வந்துதான் தண்ணீரை குடித்து செல்லும். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகமாகி இந்த அணை தன் முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணையில் இருந்து உபரி நீர் அந்தியூர் கெட்டி சமுத்திரம் ஏரி மற்றும் பெரிய ஏரிக்கு செல்கிறது. இவ்வாறு அணை நிரம்பியதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் அங்கு வந்து தண்ணீரில் பூக்களை தூவி வரவேற்றனர். இதனையடுத்து மழை பெய்தால் உபரி நீர் அதிக அளவில் வெளியேறி கெட்டிசமுத்திரம் ஏரி மற்றும் பெரிய ஏரி நிரம்பும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதனிடையில் இந்த அணையை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அதன்பின் உபரிநீர் செல்லும் வழியில் தேவையான முன்னேற்பாடுகளை செய்வதற்கு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Categories

Tech |