Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்‍கு டிடிவி இரங்கல் ….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் திரு.வேலுமாவிலியார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்த முற்றதாக குறிப்பிட்டுள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக திரு.டிடிவி தினகரன் திரு.வேலுமாவிலியரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |