மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றதால் வேலூர் தேர்தலில் திமுக, அதிமுக,நாம் தமிழர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 18ம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தல் போட்டியானது பணப்பட்டுவாடா நடைபெற்றதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 11 முதல் 18 ஆம்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக திமுக நாம் தமிழர் ஆகிய கட்சிகள் உட்பட 48 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து வேலூர் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில் அதிமுக திமுக மிகப்பெரிய மாநில கட்சிகள் ஆக இருக்கும் பட்சத்தில், வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நாம் தமிழர் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது. இதனால் நடைபெற இருக்கும் இத்தேர்தலில் திமுக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சியை போன்று மிகக் கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மையம் கட்சி வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஏசி சண்முகம் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.