வெள்ளத்தில் சிக்கியக் கொண்ட 2 பேர் உள்பட ஆடுகளையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் அருகாமையில் இருக்கும் வேப்பிலை பகுதியில் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயசீலன் தனது மகனுடன் ஆற்றின் மையப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த வெள்ளத்தில் ஆடுகள் மற்றும் அவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று ஆடுகள் மற்றும் ஜெயசீலனையும், அவரது மகனையும் மீட்டுள்ளனர். மேலும் இந்த மீட்பு பணியில் காவல்துறையினரும் உதவி புரிந்துள்ளனர்.