Categories
மாநில செய்திகள்

அதிமுக பின்னுக்கு தள்ளப்படுகிறதா….? செய்தியாளர்களின் கேள்விக்கு…. அண்ணாமலை அளித்த பதில்….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்த இடங்களை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் தோவாளையில் வெள்ளத்தினால் சேதமடைந்த பாலத்தை ஆய்வு செய்த பின் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புயலால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் வெறும் 8000 ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் காரில் சென்று அனைத்து இடங்களையும் பார்வையிடுவதால் மட்டும் மக்களின் பிரச்சினையை தெரிந்து கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, பாரதிய ஜனதா எதிர்கட்சியாக இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை புறம் தள்ளி தான் முன் செல்கிறதா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் கூறியதாவது ‘பாஜக MLAக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் சேர்ந்து தான் இப்பணியை செய்கிறோம். இது தான் மக்களுடைய கருத்து’ என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |