அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாடு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அமெரிக்க நாட்டின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றவர் ஜோ பைடன். இவர் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் அதிக முன்னுரிமையை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாடு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவிலான கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு சரியான தேர்வாக இருப்பார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.