Categories
உலக செய்திகள்

வெளியேறிய தீக் குழம்புகள்…. உணவின்றி வாடும் நாய்கள்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

லா பால்மா எனும் தீவில் சாப்பிட எதுவுமின்றி வாடும் நாய்களுக்கு ட்ரோன் வாயிலாக உணவு கொடுக்கப்படுகிறது .

ஸ்பெயின் லா பர்மா தீவில் 3 வாரங்களுக்கும் மேலாக கூம்ப்ரே பியகா எரிமலையிலிருந்து தீக் குழம்புகள் வெளியேறி நகரையே சூறையாடி வருகிறது. இதனால் குடியிருப்புகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவித்து வருகிறது.

இதன் காரணமாக 2 ட்ரோன் நிறுவனம் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இவ்வாறு ட்ரோன் மூலம் நாய்களுக்கு உணவு வழங்கப்படும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |