சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
அதன்பின் இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர் .அதன்பின் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.