தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து rc15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் வேலையும் முடிந்த பிறகு சங்கர் வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குவதற்கான உரிமைகளை வாங்கி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பிறகு சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக இயக்குவதற்கு சங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வரலாற்று படங்கள் வெளியாகி ரிலீஸ் ஆன நிலையில் தமிழிலும் அப்படி படம் வந்தால் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் அதையெல்லாம் முறியடித்து 500 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இதனால் தற்போது பல்வேறு இயக்குனர்களும் வரலாற்று நாவல்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனதால் சங்கர் இயக்கம் வேள் பாரி நாவலின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.