நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு வர்ணம் பூசுதல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், சிசிடிவி கேமரா அமைத்தல், உயர் கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்த ஆண்டு கூடுதல் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாகவும் ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளான குடிநீர், போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் பேராலய தந்தை டேவிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.