பிரான்சில் உள்ள ஒரு நகரத்தின் வேலைவாய்ப்பு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. பொது முடக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் உள்ள Marseille என்ற பகுதியில் காலையிலேயே வேலைவாய்ப்பு மையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அந்த வேலைவாய்ப்பு மையத்தில் 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வேலை என்னவென்றால், வேலைவாய்ப்பு மையத்திற்கு வருபவர்களுக்கு இந்த 85 பேரும் சேர்ந்து வேலை செய்வதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். மேலும் வேறு ஏதாவது வேலை செய்வதற்காக ஆலோசனை வழங்க வேண்டும் . இந்த ஒரு மையத்தில் மட்டுமே சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.
2020இல் மட்டும் உலகில் 275 மில்லியன் பேர் தங்களின் முழு நேர வேலையை முழுவதுமாக இழந்து விட்டனர். பிரான்சில் 6 மில்லியன் பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களில் பலர் நல்ல வேலைகளில் இருந்து சம்பாதித்தவர்கள் தான். ஆனால் தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வேலை இழந்து இருக்கின்றனர்.
இதனால் பெரும்பாலானோர் Bulimia என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர் என்றும் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் Catherine Tchifteyen என்பவர் கூறியுள்ளார். என்ன நடந்தாலும் Marseille நகர இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு மையத்தின் மூலம் புதிதாக ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.