Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை நான் வாங்கி தர்றேன்”… ரூ. 21,00,000 மோசடி செய்த தேர்வுத்துறை அதிகாரி… கைது செய்த காவல்துறையினர்….!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம்  21,00,000 பண மோசடி செய்த ஓய்வு பெற்ற தேர்வுத்துறை அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையில் உள்ள ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் பொறியியல் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு ரத்தினபுரி பகுதியை சேர்ந்த சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.இவர் தேர்வுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் சேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சதீஷ்குமாரிடம் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருகிறேன் ஆனால் அதற்காக 21 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். சதீஷ்குமார் அதனை உண்மை என்று நம்பி சேகரிடம் 21 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் நீண்ட  நாட்களாகியும் சதீஷ்குமாருக்கு வேலை வாங்கிக் கொடுக்காமல் சேகர் தாமதப்படுத்தி வந்தார். இதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமார் இதுகுறித்து அவரிடம் கேட்ட போது விரைவில் வேலை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் வேலை வாங்கித் தராததால் சதீஷ்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.  சேகர் பணத்தை தருவதாக கூறி 21 லட்சத்தில்  5 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி தொகைக்கு காசோலையை கொடுத்துள்ளார்.

அந்த காசோலையை சதீஷ்குமார் வங்கியில் கொடுத்தபோது அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று தெரிய வந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ்குமார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சதீஷ்குமாரிடம் சேகர் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |