Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தல் விதி அமலில் இருக்கு…! ஒரு பேனரையும் விடாதீங்க… அதிரடி காட்டும் மாவட்ட நிர்வாகம்…!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் தரங்கம்பாடி பகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சம்பந்தமாக சோதனை மேற்கொள்வதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் அரசியல் கட்சியினர் சாலையோரம் வைத்திருக்கும் பேனர்களை அகற்றி வருகின்றனர்.

இதையடுத்து அவர்கள் வாகன சோதனை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்களாக பிரிந்து பரிசோதித்து வருகின்றனர். இதேபோல் தரங்கம்பாடி, கிடாரங்கொண்டான், கருவி, ராஜீவ்புரம், செம்பனார்கோவில், ஆறுபாதி, பொறையாறு, பரசலூர், கீழையூர் ஆகிய பகுதிகளில் பறக்கும் படை தாசில்தார் ராகவன் தலைமையில் சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் குருமூர்த்தி மற்றும் காவல்துறை கொண்ட குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

Categories

Tech |