Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலை தடுமாறிய வாகனம்… இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் நிஜாமுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீன் மற்றும் பெரிய பட்டிணத்தை சேர்ந்த பகத்ராஜா ஆகிய இருவரும் பரமக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடி பொதுவக்குடிநான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது காருக்கு முன்பு ஆந்திராவில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்றுள்ளது. அப்போது கார் திடீரென கட்டுபாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் காரின் முன்புறம் அமர்ந்திருந்த நிஜாமுதீன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காரை ஒட்டி சென்ற பகத்ராஜா பலத்த காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து லாரியை ஓட்டிவந்த திருப்பத்துரை சேர்ந்த வீரமணி என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |