சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 182 பேரின் மோட்டார் சைக்கிளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சாலைகளில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு காவல் துறையினர் 2 வது நாளாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஊரடங்கு உத்தரவையும் மீறி சுற்றித்திரிந்த 182 பேரின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த 215 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து எச்சரிக்கையை விடுத்து அனுப்பியுள்ளனர்.