சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக காய்கறி கடையாக சரக்கு ஆட்டோ மாறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நலன் கருதி அந்தந்த பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அழகாபுரம் மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்களிலுள்ள இருக்கையை கழற்றி விட்டு கூடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து வீதி வீதியாக பொதுமக்கள் வசதிக்காக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கு தினமும் 500 முதல் 1000 வரை வருமானம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.