Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… வாகனங்களில் காய்கறி விற்பனை… தொடங்கி வைத்த அமைச்சர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கினால் வாகனங்களில் காய்கறிகள் தெருத் தெருவாக விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறி கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மக்களின் நலன் கருதி வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தலைமையில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்துள்ளார். அதில் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |