மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புதூர் பகுதியில் ரங்கராஜ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ரங்கராஜ் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் இருக்கும் தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து ரங்கராஜ் மணியாச்சி அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட ரங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.