முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை மாநகராட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளுக்கே வினியோகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து தற்போது முக கவசம் அறியாதவர்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்று முதல் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறி பழங்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்து காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.