வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் துக்கநிலையிலிருந்து மீள முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய மகள் பிரியா(35) சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று விட்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பிறந்த பிரியாவின் தாயார் மீனாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.