நடிகர் விஷால் நடிப்பில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் செல்லமே திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஷால். இவர், நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார். கடைசியாக தீபாவளி பண்டிகையின்போது வெளியான இவரின் எனிமி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இவர், மார்க் ஆண்டனி, வீரமே வாகை சூடும் மற்றும் லத்தி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில், வீரமே வாகை சூடும் திரைப்படம் வரும் 26-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.