Categories
உலக செய்திகள்

என்ன…! ஆசனவாய்க்குள் வெடிகுண்டா…? அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நபரது ஆசனவாய்க்குள் 2 ஆம் உலகப் போர் காலத்திலுள்ள வெடிகுண்டு நுழைந்ததையடுத்து அவர் அந்நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள gloucextsrshire என்னும் பகுதியில் வாழும் நபர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இராணுவ ரீதியான சாமான்களை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் இவர் ராணுவ ரீதியான சாமான்கள் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் 2 ஆம் உலகப்போர் காலத்தைச் சார்ந்த வெடிகுண்டு ஒன்றின் மீது விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது ஆசனவாய்க்குள் 2 ஆம் உலகப்போர் காலத்தைச் வெடிகுண்டு ஒன்று புகுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து gloucextsrshire என்னும் பகுதியில் வாழும் அவர் ராயல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆசனவாய்க்குள் வெடிகுண்டு புகுந்த நபரை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாகவே மருத்துவர்கள் தங்களது விடாமுயற்சியால் ஆசனவாய்க்குள் புகுந்த வெடிகுண்டை வெளியேற்றியுள்ளார்கள்.

Categories

Tech |