Categories
செய்திகள் மாநில செய்திகள்

வேதா இல்லம் வழக்கு…”மறுபரிசீலனை செய்ய முடியாது”… உயர்நீதிமன்றம் அறிவிப்பு …!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு சொந்தமாக்குதல் என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசுக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது பற்றிய தகவல் அரசிதலிலும் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இல்லத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி இருந்தது. இதனை எதிர்த்து ஜெ.தீபா மற்றும் தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.மேலும் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஜெயலலிதாவின் வாரிசு, அரசுடைமை ஆக்கப்பட்டது எதிராக வழக்கு உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே  உள்ளது. இதுகுறித்து விசாரணை இன்று நடைபெற்றது. அந்த விசாரணையில் ஜெயலலிதா இல்லத்தை அரசு சொந்தமாக்கிக் கொள்வது என்பது கொள்கை முடிவு. அதனால் இதனை மறுபரிசீலனை  செய்து பார்க்க முடியவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்றும் வகையில் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபக்  தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |