Categories
தேசிய செய்திகள்

மக்களே நம்புங்க….. உங்களுக்காக தான் செய்யுறேன்….. அமைச்சரின் நெகிழ வைக்கும் செயல்….!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டாலும் அனைவருக்கும் நோய்க்கான தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

ஆனால் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரும் பொதுமக்களுக்கு ஒரு விதமான அச்சம் நிலவி வந்தது. அதற்கான காரணம் உலகம் முழுவதும் கொரோனா  தடுப்பூசியினால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட செய்திகள் பரவி வந்தன. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

பொதுமக்களிடையே இந்த அச்சத்தைப் போக்குவதற்காக வெளிநாடுகளில் அங்குள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பொது மக்களுக்கு முன் தங்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதாக அறிவித்து அதை செய்தும் காட்டினர். அந்த வகையில்,

தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி மேல் நம்பிக்கை வர தாமே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த 10 மருத்துவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |